வாழைத்தார் ஏல சிறப்பு விற்பனை: அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அளுக்குளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஈரோடு மாவட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூட குளிர்பதனக்கிடங்கு வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் விவசாயிகளின் நலன் கருதி கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் வாழைத்தார் ஏல சிறப்பு விற்பனையை  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.


இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், சொசைட்டி தலைவர் காளியப்பன், யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எஸ்.  பார்த்திபன், கோபி கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர் கந்த ராஜா, மேலாளர் ப. ஷாகுல் ஹமீத், செயலாளர் சோமசுந்தரம், ஊராட்சி கழக செயலாளர் கே. பாண்டுரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.