வாசுதேவநல்லூர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்

நெல்லை மேற்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார். 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பணிபுரியும் 70 சுகாதாரப்பணியாளர்கள், ஊழியர்கள்,  மற்றும்  30 மாற்றுதிரனாளிகளுக்கு சிக்கன் பிரியாணி, முக கவசம், கைகழுவ டெட்டால், மற்றும் ஒவ்வொரு வருக்கும் தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்பட்டது. வாசு பேரூர் திமுக சார்பில பேரூராட்சி பகுதி முழுவதும் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது காவலர்கள் மற்றும்  தீயணைப்பு காவலர்களுக்கும் பிரியாணி முக கவசம், டெட்டால், வழங்கப்பட்டது

 

  இந்த நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில்  திமுக தலைமை செயற்குழு உறுபபினர் யூஎஸ்டி.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் ஜி.மாடசாமி பேரூர் கழக செயலாளர் சரவணன், முன்னாள் பேருராட்சி தலைவர் தவமணி,ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி சொர்ணராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஒன்றிய பிரதிநிதிகாளியப்பன், நாட்டாமை ஆனந்தராஜ், திமுக பேச்சாளர் திருப்பதி,  தகவல் தொழில்நுட்ப அணி கட்டபொம்மன், ரூபி பாலசுப்பிரமணியன், சிற்பி செல்லப்பா,  முன்னாள் கவுன்சிலர் முருகன், கணேசன்,  கபில்தேவதாஸ், சுருளிவேல், துரைப்பாண்டியன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்சியை பேருர் கழக செயலாளர்  சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.