கோபியில் காவலர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை -காவலர் குடும்ப உறுப்பினர்கள் பாராட்டு 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆலோசனையின்படி, கோபி காவல் உட்கோட்ட பகுதியைச் சார்ந்த கோபி காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இதில்  காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர் சோமசுந்தரம், சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக காவலர்களின் குடும்ப உறுப்பினருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததை  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷை காவலர் குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.