வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு 
வேப்பூர் அருகே நகர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு மாவட்ட தணிக்கை அலுவலர் ஆய்வு செய்தார்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள  நல்லூர் ஒன்றியம், நகர் ஊராட்சியில், நேற்று  கிருமி நாசினி தெளிக்கும் பணி நடை பெற்றது.  மாவட்ட தணிக்கை   உதவி இயக்குநர் ரவிசந்திரன்  கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் 

அவருடன்  நகர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் , துணைத் தலைவர் ராமசாமி, ஊராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் வார்டு உறுப்பினர்  பாக்கியராஜ் , டேங்க் ஆப்பரேட்டர் அரசன் ஆகியோர் உடன் இருந்தனர்