சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கபடும்: பல்லாவரம் வட்டாசியர் எச்சரிக்கை

பல்லாவரம் அதிக மக்கள் கூடும் இடங்களான காய்கறி மார்கெட் பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கபடும் என வட்டாச்சியர் எச்சரிக்கை


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு  போடப்பட்டு நடை முறையில் உள்ள நிலையில் சென்னை அடுத்த பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரித்தும் அவற்றை பொறுப்படுத்தாமல் காய் கறி மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சமூக இடை வெளி கடைப்பிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனையறிந்த பல்லாவரம் வட்டாச்சியர் மார்க்கெட் பகுதிக்கு வந்து தடையை மீறி கடை வைத்திருப்போர் மற்றும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றாத  கடைகளுக்கு சீல் வைக்கபடும் என எச்சரித்தனர்.