தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் எச்சரிக்கை

நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் பத்திரிகையாளர்களிடம் கூறியது: நெல்லை மாநகர பகுதியில் அத்யாவசிய பணி செய்யும் நபர்களின் 4 சக்கர வாகனங்களை தவிர மற்ற 4 சக்கர வாகனங்கள் இயங்க  முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


2 சக்கர வாகனங்களில் தங்கள் குடியிருப்பு உள்ள பகுதியிலிருந்து  2 கிமீ சுற்றுளவுக்குள் மட்டுமே காய்கறி மளிகை பொருட்கள் மருந்து பொருட்கள்  வாங்க  காலை 6 மணி முதல் 1 மணி வரை செல்ல அனுமதிக்கப்படும்..


1 மணிக்கு பின்னர் எந்த அத்யாவசிய தேவையில்லாத 2 சக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. வழிபாட்டு தலங்களுக்கு தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது. தடையை மீறுவோர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.


இதுவரை நெல்லை மாநகரில் 550 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு  1200க்கும் மேற்பட்ட காவலர்களால்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.