காசிபாளையம் (கோபி )பேரூராட்சியில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் தீவிரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம் (கோபி )பேரூராட்சியில் கொரோனா வைரஸ்  நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆலோசனையின் படி துரித கதியில் துப்புரவு பணிகளும், கிருமிநாசினி தெளிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


பேரூராட்சியில் உள்ள    தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறைகள், முழு உடல் கவசம் கொடுக்கப்பட்டு 15வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மஞ்சள் நீர் மற்றும் லைஸால் கலந்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  


தினந்தோறும் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு படியும், ஈரோடு மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆலோசனையின் படியும் செயல் அலுவலர் ஏ.ரமேஸ்குமார் தலைமையில் கொண்ட 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.


மேலும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகளையும் அங்கன் வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.