வீட்டு வாடகை கேட்காதீங்கப்பா... கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க கடந்த மாதம் 23ந் தேதி மாலை 8 மணி 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், உட்பட அனைத்து நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டு பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இதனால் கட்டுமானமப் பணியாளர்கள்,  தினக்கூலிகள், குறைந்தளவு மாதச் சம்பளம் வாங்குபவர்கள் உட்பட அனைவரும் வீட்டில் இருக்கும் நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக பொது மக்களின் கருதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகை மற்றும் அரிசி, பருப்பு ஆகிய நிவாரணப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.


  இந்த இக்ககட்டான சூழ்நிலையில் வாடகை வீட்டில் வசிப்பவர்களின் உரிமையாளர்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை தங்கள் வீடுகளில் வசிப்பவர்களிடம் மாத வாடகைக்கு வசூலிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.