ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது.. போலீஸ் கட்டுப்பாட்டில் கோபி நகரம்: எல்லைகளை அடைக்க செய்த எஸ். பி., சக்தி கணேசன்

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் உத்தரவின்பேரில் கோபி துணை கண்காணிப்பாளர் தங்கவேல் ஆலோசனையின்படி கோபி காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் கோபிசெட்டிபாளையம்நகரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.


ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பிரதான சாலையில் கோபிசெட்டிபாளையம் எல்லையான கரட்டூர், கரட்டடிபாளையம் ஆகிய இடங்களிலும், அந்தியூர், திருப்பூர் செல்லும் பிரதான சாலைகளலும், கிராமங்களில் இருந்து கோபிசெட்டிபாளையம் வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து நகரை காவல்துறையினா் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.


கோபிசெட்டிபாளையம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தொடர்ந்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.