விவசாயக்கட்டமைப்புகளை வலுப்படுத்த ரூ.1 லட்சம் கோடி: நிர்மலா சீத்தாராமன் தகவல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது:


இன்று விவசாயம், பால் தொழில், மீன்பிடி தொழில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.


இத்துறைகளில் 11 அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. இதில் 8 அமைப்புகள் வேளாண் உற்பத்தி பற்றியும், மீதி மூன்று நிர்வாகம் மற்றும் சீர்திருத்தம் பற்றியும் இருக்கும்.


இந்தியா மிகப்பெரியா பால் உற்பத்தியாளர், சணல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் பருப்பு உற்பத்தியாளராக திகழ்கிறது.


கரும்பு உற்பத்தியும், சர்க்கரை உற்பத்தியும் இங்கு  உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது.


ஊரடங்கு காலத்தில் ரூ.74 ஆயிரம் கோடி மதிப்பில் வேளாண்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.


ரூ.18,700 கோடி மதிப்பிலான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு உள்ளது.


தினசரி 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 


பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் 18,700 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.


வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விவசாயத்துறை சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.


சிறு உணவு நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்படும். 2 லட்சம் சிறு உணவு உற்பத்தி நிறுவனங்கள் இதன்மூலம் பயன்பெறும்.


 தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்கு, ஆந்திராவில் மஞ்சள் நிறுவனங்களுக்கு உதவி. 


பால் வெண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 


மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.


தேனீ வளர்ப்புத் துறைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.


கடல் சார்ந்த மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 


மாநிலம் விட்டு மாநிலம் சென்று விவசாய விளை பொருட்களை விற்கத் தடையில்லை.


 


 


Previous Post Next Post