10,600 கிலோ மருத்துவ உபகரணங்கள்: 4 சரக்கு விமானங்களில் வந்தது

சென்னைக்கு ஒரே நாள் இரவில் 4 சரக்கு விமானங்களில் 10,600 கிலோ மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தன.கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.அதில் குறிப்பாக சென்னை நகரில் மிகவும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.சென்னை விமானநிலையத்திற்கு நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை 4 சரக்கு விமானங்கள் வந்தன.இரவு 8 மணிக்கு துபாயிலிருந்து வந்த எத்தியாா்ட் ஏா்லைன்ஸ் விமானத்தில் 4,500 கிலோ,இரவு 11 மணிக்கு துபாயிலிருந்து வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் 2,100 கிலோ,இரவு 11.40 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ் விமானத்தில் 3,800 கிலோ,இன்று அதிகாலை 4.30 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் 700 கிலோ வீதம் மொத்தம் 10,600 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன.அவைகள் அமெரிக்கா,நெதா்லாந்து,இங்கிலாந்து,சீனா,ஹாங்காங்,சிங்கபூா் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வந்திருந்தன.அவைகளில் வெண்டிலேட்டா் தயாரிப்பதற்கான உதிரிப்பாகங்கள்,நவீன ரக தொ்மா மீட்டா்கள்,மாஸ்க்குகள்,கிளவுஸ்கள்,கிரிமிநாசினி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இருந்தன.


சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சா்வதேச சரக்ககம் மற்றும் கொரியா் பாா்சல் பகுதிகளில் மருத்துவ பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக பரிசோதணை ஆய்வுகளை முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா்.