சாத்தான்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 100 பேர்களுக்கு தலா 5 கிலோ அரிசி

சாத்தான்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரோனா மக்கள் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரிசி பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 


 

இந்நிகழ்ச்சிக்கு  அக்கட்சி மாவட்ட செயலர் வழக்குரைஞர் புவனேஸ்வரன் தலைமை வகித்து 100பேர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் அரிசி பை வழங்கினார். 

 

இதில் மாவட்ட அவைத் தலைவர் பொன்பாண்டியன், ஒன்றிய செயலர் ரா. திவாகரன், மாவட்ட இளைஞர் பாசறை துணைத் தலைவர் வழக்குரைஞர் இளங்கோ,  மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் தங்கப்பாண்டியன், ஒன்றிய துணைசெயலர் சுரேஷ்,  பண்டாரபுரம் ஊராட்சி செயலர் ராஜபாண்டி, நடுவக்குறிச்சி ஊராட்சி செயலர் பெருமாள்,  வார்டு செயலர் தங்கத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்