கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11- ஆம் வகுப்புக்கு மீதமுள்ள ஒரு தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

கோபியில் தமிழக பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈரோடு மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்றிய அனைத்துதுறை சார்ந்தவர்களுக்கும் நன்றி கூறினார்.மேலும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கோபி நகராட்சியில் கொரோனா பாதித்த பகுதியில் பணியாற்றிய துய்மை பணியாளர்கள்,நகராட்சி அலுவலர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கிய தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது..,


 பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரையிலும் 80 சதவிகித பாடப்புத்தகங்கள் மற்றும் நேட்டுப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்காங்கே சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்க நடவடிக்மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காக அச்சகங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு முதல்வரின் ஒத்துழைப்போடு அப்பணிகள் சிறப்பாக செயல்பட்டுவருகிறது...


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ளநிலையில் கோரோனா தீர்வு கண்டவுடன் அந்த தேர்வு எந்த தேதியில் நடைபெறும் என்பதை பின்னர் அறிவிக்கப்படும். பாக்கி உள்ள ஒரு தேர்வும் ரத்து செய்யப்படமாட்டாது.


நீட் தேர்வுக்கு இன்று (6.5.2020) 11 மணியளவில் நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அனைவருக்கு இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நூலகங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு உளதியம் வழங்க துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது...


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இடைவெளியில்லாம் நடைபெறாது பொதுத்தேர்வு அட்டவணையை பொறுத்தவரை இடைவெளி இருக்கும். நமக்கு தேவை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமே அதற்காக ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்களை கற்றுத்தரும் நடவடிக்கைள் நடைபெற்றுவருகிறது....


கோரோனா நோய் தடுப்பிற்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் அந்தந்த மாதம் வழங்கப்படுகிறது. இறுதியில் மொத்த தொகை குறித்து அறிவிக்கப்படும்....


ஈரோடுமாவட்டம் நேற்று (5.5.2020) நல்லிரவோடு பச்சை மண்டலமாக மாறியுள்ளது. இதற்கு ஒத்துழைத்த மக்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்கள் செவிலியர்கள் இறைவன் போல் காத்து பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு நன்றியை தெரிவித்துக்கொள்வது என தெரியவில்லை..


என அமைச்சர் தெரிவித்துள்ளார்