12,000 பேருக்கு 3000 லிட்டர் பசும்பால்: சேவாபாரதி அமைப்பினர் வழங்கினர்

திருப்பூர் மாவட்ட சேவாபாரதியின் சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா நோய்த்தடுப்பு & நிவாரணப்பணிகள் கடந்த 28.03.2020 முதல் 03.05.2020 வரை 37 நாட்களாக பல்வேறு விதமான மக்கள் நலன் சார்ந்த பணிகள் நடைபெற்று வந்தன. ஊரடங்கினால் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு சேவாபாரதியானது சுமார் 2000 தன்னார்வலர்களுடன் களப்பணியில் ஈடுபட்டது.


1. ‌திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்படுத்துதல்,


2. ‌மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் சமுதாய சமையற்கூடங்கள் அமைத்தல்,


3. ‌ஏழை & ஆதரவற்ற மக்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு தினந்தோறும் மூன்றுவேளை உணவுகள் விநியோகம்,


4. ‌ஆவின் பால் நிறுவனத்துடன் இணைந்து பால் பாக்கெட்கள் விநியோகம்,


5. ‌காய்கறிப்பொருட்கள் விநியோகம்,


6. ‌மளிகைப்பொருட்கள் விநியோகம்,


7. ‌மருந்துப்பொருட்கள் விநியோகம்,


8. ‌தன்னார்வலர்கள் மூலம் இரத்ததானம் அளித்தல்,


9. ‌தினந்தோறும் குழந்தைகள் & மூத்தோர்களுக்கு நேரடியாகச் சென்று இலவச பசும்பால் விநியோகம் செய்தல்,


10. ‌மருத்துவமனைகளை சுத்தம் செய்தல் & மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்புக்கவசங்களை வழங்குதல்,


11. ‌மளிகைப்பொருட்கள் தொகுப்பு விநியோகம்,


12. ‌ஏழை மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கியது,


13. ‌ஆபத்துகால இலவச ஆம்புலன்ஸ் வசதி,


14. ‌அனைத்து பகுதி மக்களுக்கும் தினந்தோறும் கபசுர குடிநீர் வழங்குதல்,


15. ‌மக்களின் தேவைகளை அறிய பொது சேவை மையம்,


16. ‌பிற மாநில & பிற மாவட்ட மக்களில் ரேசன்கார்டு இல்லாதவர்களுக்கும் பொது விநியோகத்திட்ட வழங்கல்துறை மூலம் இணைந்து ரேசன் பொருட்கள் விநியோகம்,


17. ‌கருணை இல்லங்களுக்கு தேவைப்படும் மளிகை & மருந்துப்பொருட்கள் வழங்குதல்,


18. ‌மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு மூலம் ஆரோக்கியம் திட்டம் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கும், அனைத்து அமைப்புகளின் தன்னார்வலர்களுக்கும், காவல்துறை, தீயணைப்புத் துறையினர்களுக்கும், கொரோனா நோய்த்தொற்று பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்கள்மூலம் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்குதல்,


19. ‌அரசு வாகனங்கள் & பொதுமக்களின் வாகனங்களுக்கு அவர்களின் இடத்திற்கே நேரில் சென்று இலவசமாக பழுதுபார்த்தல்,


20. ‌காவல்நிலையங்களுக்கு தூய்மைப் பொருட்கள் வழங்கியது,


21. ‌தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து பாராட்டுகள் தெரிவித்து கெளரவித்தது...
              -  போன்ற பணிகள் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.


இவற்றுள் பெரும்பாலான பணிகள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாலும், அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டதாலும் நிறைவடைந்துள்ளது. ஆனால் குழந்தைகள் & ஏழை மூத்தோர்களுக்கான இலவச பசும்பால் விநியோகம், மருத்துவ பரிசோதனைகள் & அரிசி உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் தொகுப்பு விநியோகம் ஆகிய பணிகள் மட்டும் தொய்வின்றி தினமும் நடைபெற்று வருகின்றன. 


இதில் ‌குழந்தைகளுக்கான இலவச பசும்பாலினை கோவில் வழி, ஸ்ரீ மீனாட்சி டெய்ரி ஃபார்ம்ஸ் உரிமையாளர்  ஆனந்த்


நிவாரண முகாம் தொடங்கியது முதல் இன்று வரை இலவசமாகவே வழங்கி வருவது மிகவும் போற்றுதலுக்குரியது. தினந்தோறும் 60 லிட்டர் பசும்பால் 12 பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300 நபர்களுக்கு காலை வேளையில் வழங்கப்படுகிறது. மொத்தம் 3000 லிட்டர் பால் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.


மேலும் நேஷனல் காட்டன்ஸ் உரிமையாளர்கள்  சக்திவேல் -மேகலா தம்பதியினர்களும் தினந்தோறும் காலையில் 3 லிட்டர், மாலையில் 8 லிட்டர் நாட்டுபசுவின் பாலினை தினமும் வழங்கி வருகிறார்கள். 


Previous Post Next Post