நந்தம்பாக்கத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 144 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்  

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தற்காலிக கொரோனா மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையில் 550 படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.

 

இந்த தற்காலிக மருத்துமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள 290க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இங்கு காற்று வசதி இல்லாமல் சிரமப்படுவதாக கூறி கடந்த 2 தினங்களுக்கு முன் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

 

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்று நோய் தொற்று இல்லாமல் குணமடைந்த 144 பேரை மாநகர பஸ் மற்றும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.