சொந்த ஊர் செல்லும் 1464 வடமாநில தொழிலாளர்கள்; எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழியனுப்பி வைத்தார்


திருப்பூரில் இருந்து  பீகார் மாநிலம் ஹாஜிபூருக்கு, சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் 1464 பேரை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டது.இதை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு தாசில்தார் சுந்தரம், போலீஸ் உதவி கமிஷனர் கஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கணேசன், ரயில்வே அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.