கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டயரை எரித்து போராட்டம்...15 பேர் கைது.

சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டயரை எரித்து போராட்டம். 15 பேர் கைது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஆடை நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாள் முதல் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமலும் உணவின்றி கையில் பணம் இன்றி தவித்து வந்தனர்.


இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த நேதாஜி அப்பேரல் பார்க் பகுதியில் தங்கி பணியாற்றிவரும் 300-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே டயர்களை எரித்து தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து விரைந்து வந்த அவினாசி போலீசார் வடமாநில இளைஞர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். போராட்டத்தை தூண்டியதாக 15 வடமாநில இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.