கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 154 மின்னணு குடும்ப அட்டை, 221 நபருக்கு முதியோர் உதவி தொகை

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில்154 மின்னணு குடும்ப அட்டை, 221 நபருக்கு முதியோர் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் விதிப்படி  பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், முன்னாள் சிட்கோ சேர்மன் சிந்து ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் ஜெயராமன், ஆவின் தலைவர் காளியப்பன், தாசில்தார் சிவசங்கர்,நிலவருவாய் அலுவலர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.