நத்தம் அருகே முன்விரோதத்தில் இளைஞர் குத்திக் கொலை; 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது

நத்தம் அருகே முன்விரோதத்தில் இளைஞர் குத்திக் கொலை. 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது


 

கொலை செய்யப்பட்ட மாரிமுத்து(பைல்படம்) 


 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மாரிமுத்து (30). அதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா(40). இவர்களுக்குள் கருப்பு கோவில் பாதை பிரச்சினை சம்பந்தமாகவும், உள்ளாட்சி தேர்தல் காரணமாகவும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு  இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது உறவினர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து செங்குளத்தை சேர்ந்த கருப்பையா(40), சிவக்குமார்(40), முத்துலெட்சுமி (60), பூசாரி குமார் (41) 16 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.