கொண்டையம் பாளையத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம் பாளையத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ராஜேந்திரன் தலைமையில் பங்களாபுதூர் காவல் ஆய்வாளர் அ.நெப்போலியன்,ஊராட்சி மன்ற தலைவர் மரகதம்பாலு ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் ஏ.மனோகரன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.முன்னதாக நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய செயலாளர் ஏ.வடிவேல் வரவேற்புரை வழங்கினார்.உடன் தலைவர் என்.ராஜன்,துணை தலைவர் ஆர்.படவெட்டி காவல் உதவி ஆய்வாளர் பணி நிறைவு,பொருளாளர் கே.ஏ.மணிசேகரன்,துணை செயலாளர் கே.பிரகாஷ்,புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர்,சட்ட ஆலோசகர் கே.ஜெகதீஸ்வரன்,ஏ.பி.பழனிசாமி,ராஜா(எ)எம்.பழனிச்சாமி உட்பட நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய அனைத்து  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.