திருப்பூரில் அண்ணா தொழிற்சங்கம்சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு தலா10 கிலோ கோதுமைமாவு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட45-வது வார்டில்  பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கும், குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கும், டிராக்டர், வேன்மூலமாக கிருமிநாசினி தெளிப்பவர்களுக்கும், தூய்மைபணி மேற்பார்வையாளர்களுக்கும் என மொத்தம் 200 தொழிலாளர்களுக்கு  திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும், 45-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினருமான  எம்.கண்ணப்பன் தலா10 கிலோ கோதுமைமாவு வழங்கினார். உடன் உதவி பொறியாளர்கள் முனியாண்டி, கோவிந்தபிரபாகரன், சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன், குழாய்ஆய்வாளர் தங்கராஜ், சி.எஸ்.கண்ணபிரான், சரவணன், சந்தோஷ்,பிலால்எஸ்.டபிள்யூ.எம்.எஸ். மண்டல மேலாளர் ஆனந்தன், மேற்பார்வையாளர்கள் பாலமுருகன், கிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.