2000 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பல்லடம் சட்டமன்ற தொகுதி,முதலிபாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரின் சொந்த நிதியின் மூலம்  மானூர், கரியம்பாளையம் எம்ஜிஆர் நகர், கெங்கநாய்க்கன் பாளையம், நீலிகாடு, வட்டக் காட்டுப்புதூர், மாணிக்கபுரம், ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2000 ஏழை எளிய குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன்  


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தூய்மைப் பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்களுக்கு அரிசி  மற்றும் முக கவசங்களை வழங்கினார் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் மயூரிப் பிரியா, நடராஜன், பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர்  சித்துராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் கல்பனா, வேலுச்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காசிம்பாய், குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்