பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நிவாரணமாக 2000 குடும்பங்களுக்கு அரிசி

கொரோனா நிவாரணமாக 2000 குடும்பங்களுக்கு அரிசி முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ வழங்கினார்கள்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் மாநகராட்சி 54,55,57,58, ஆகிய வார்டுகளுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் சொந்த நிதியின் மூலம் கொரோனா நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சிப்   பகுதிகளான  குப்பம்பாளையம், குப்பாண்டபாளையம் ஏ.டி. காலனி, இந்திரா நகர், முருகம்பாளையம், பெரியார் காலனி, இடுவம்பாளையம் வஞ்சிபாளையம், ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2000 ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவுக்காக அரிசி பைகள் வழங்கப்பட்டது. 

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

இதை  திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான கரைப்புதூர் ஏ.நடராஜன்  வழங்கினார்கள். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் அரசு வழக்கறிஞருமான கே.என்.சுப்பிரமணியம், சுப்பிரமணியம், வட்ட கழக செயலாளர்கள்  ராமமூர்த்தி, நாகஜோதி, கவிக்குமார், சிவா, லட்சுமி கோவிந்தராஜன், கதிர்வேல், சுந்தரப்பன், சுரேந்தர், பல்லடம் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், ஷாஜகான்  அருண் சரவணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்

 

Previous Post Next Post