2000 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக அரிசி, காய்கறி தொகுப்பு; எம்.எல்.ஏ சு.குணசேகரன் வழங்கினார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 13வது வார்டில் 2000 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக அரிசி, காய்கறி தொகுப்புகளை சு.குணசேகரன் எம்.எல்.ஏ வழங்கினார்.


 


 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 13வது வார்டு பகுதியை சேர்ந்த 2,000 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக தலா அரிசி 5 கிலோ அரிசி, வெங்காயம், தக்காளி, கேரட், புடலங்காய், கத்தரிக்காய், மிளகாய், பச்சை மிளகாய்,  முட்டைக்கோஸ் உள்ளிட்ட 5 கிலோ காய்கறி தொகுப்புகளை சிக்கண்ணா அரசுகலைக் கல்லூரி விளையாட்டு திடலில் சு. குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

 


 

மேலும் அவர் பொதுமக்கள் மத்தியில் கூறும்போது, உலக அளவில் பெரும் பதட்ட நிலையை உருவாக்காகியுளள கொரானா வைரஸ் அரக்கனிடமிருந்து கிருமியிடமிருந்து  நாம் விடுபட வேண்டுமெனறால்,  தினசரி அரை மணிக்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினியை உபயோகப்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போதும், வெளியில் செல்லும்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார். 




 


 

இந்த நிகழ்ச்சியில் அர்பன் வங்கித் தலைவர் பி.கே.எஸ்.சடையப்பன், வட்டக்கிளைச் செயலாளர் ஆர்.ஏ.சேகர், தம்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் குடையுடன் வந்து சமூக விலகளை கடைப்பிடித்து பொருட்களை பெற்று சென்றனர்.

 

 




Previous Post Next Post