தண்டுபத்து கூட்டுறவு சங்கத்தில் ரூ.21 லட்சம் கடனுதவி 

விவசாயம் சார்ந்த தொழில்களான பனை பொருட்களை வைத்து பெட்டி,  பாய்  உள்ளிட்டவைகளை வீட்டிலிருந்தே உற்பத்தி செய்பவர்களுக்கு மத்தியகால கடன்  தலா ரூ.50 ஆயிரம் வீதம் 42 பேருக்கு கடன் உதவியாக தண்டுபத்து கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டது

 

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி மூலம் திருச்செந்தூர் தாலுகா தண்டுபத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று விவசாயம் சார்ந்த தொழில்களான பனை பொருட்களை வைத்து பெட்டி,  பாய்  உள்ளிட்ட  பொருள்களை  வீட்டிலிருந்தே உற்பத்தி செய்பவர்களுக்கு மத்தியகால கடன் உதவி  வழங்கப்பட்டது. இதில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 42 பேருக்கு கடன் உதவியாக கூட்டுறவு சங்க தலைவர் தண்டுபத்து ஜெயராமன் மொத்தம் ரூ.21 லட்சம் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில், தொழிலதிபர் ஜெகதா ஜெயராமன், சங்கச் செயலாளர் ஜோதி பாத்திமா, சங்க உறுப்பினர்கள் ஜெயலட்சுமி, பால வனிதா, சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.