சேலம் டவுன் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச்சென்ற மது பிரியர்கள் 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


சேலம் மாவட்டம் சேலம் டவுன்  அருகே உள்ள அரசு மதுபானக்கடைகள் இன்று காலை 10 மணியளவில் திறக்கப்பட்டது. கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று சேலம் டவுன் அரசு மதுபானக்கடையில் 200க்கும் மேற்பட்ட குடிமகன்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வெயில் காரணமாக குடை பிடித்துக்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து குடைபிடித்து வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். இன்று கடை திறக்கப்பட்ட நிலையில்  குவாட்டருக்கு  10 ரூபாயும்  பிரிமியம் ரக மது பானங்களுக்கு 20 ரூபாயும் ஏற்றப்பட்ட நிலையில் வரிசையில் நின்ற ஒருவர் விலைவாசி ஏறாமல் பழைய விலைக்கே மதுபானம் கிடைத்தால் பரவாயில்லை என கூறினார். மேலும் இடைவெளி விட்டு ஏராளமான குடிமகன்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்