விளாத்திகுளம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 3 கைது




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா, நாகலாபுரம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் சாராயம் காய்ச்சியதாக 6 பேர்கள் மீது வழக்குப் பதிந்து பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை நாகலாபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

 


 

விளாத்திகுளம் நாகலாபுரம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி லிட்டா் ரூ 1500 வரையில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நாகலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வந்தனர்.

 

ரெகுராமபுரம் பகுதிகளில் பல முறை சோதனை நடத்தியும் சாராயம் காய்ச்சும் நபர்களையும் சாராயம் காய்ச்சும் இடத்தை அடையாளம் காண முடியவில்லை.இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மாசார்பட்டி காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷி தலைமையில் போலீசார் ரெகுராமாபுரம் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

 


 

இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் கண்ணன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது அங்கு சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த ரெகுராமபுரத்தை  சேர்ந்த கண்ணன் என்பவரது மகனும் மதுரை சட்டக்கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவருமான விவேக் (20),வௌவால்தொத்தி பஞ்சாயத்து துணைத்தலைவர் வெள்ளைச்சாமி (40),ரெகுராமபுரத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவரது மகனும் மதுரை தனியாா் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவனுமான ராஜகனி (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு மற்றும் பானைகளை பறிமுதல் செய்து விசாரனை தடத்தினர்.

 

விசாரணையில் ரெகுராமபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் சேகர் ஆகிய 3 பேரும் மூலக் காரணமாக செயல்பட்டது தெரியவந்தது.இதனயடுத்து கண்ணன்,மாரிச்செல்வம்,சேகர் ஆகிய 3 பேர்கள் மீதும் வழக்குபதிந்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 

 



 

Previous Post Next Post