பழனி ஸ்ரீ கந்த விலாஸ் உரிமையாளர் செல்வகுமார் சார்பில் 300-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள்


பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கௌரவ தலைவரும் ஸ்ரீ கந்த விலாஸ் உரிமையாளருமான செல்வகுமார் அவர்களின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

 


 

இந்த நிகழ்வில் சார்  ஆட்சியர் உமா அவர்கள் அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார் அருகே வட்டாட்சியர் பழனிச்சாமி, பழனி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன்,

 


 

திருக்கோவில் சூப்பிரண்டு முருகேசன், மற்றும் அனைத்து  வணிகர் சங்க பேரமைப்பு நகர செயலாளர் ஹக்கீம் ராஜா, தமிழக வேளாளர் பேரவை முருகானந்தம் Ex.MC,VIP குமார் Ex.MC சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், அனைத்து அர்ச்சகர்களுக்கும்  வழங்கினர்.