நத்தம் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு- முதியவர் கைது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி-கைப்பியாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வருகிறது. இதையொட்டி நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி உள்ளிட்ட போலீசார் சென்று கைப்பியாபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது சின்னக்கருப்பன் (60) என்பவர் தனது தோட்டபகுதியில் 50 லிட்டர் கள்ளச்சாரயம் ஊறல் போட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சின்னக் கருப்பனை கைது செய்த போலீசார் அங்கு இருந்த மூலப்பொருள்களையும் பழவகைகளையும்  கைப்பற்றி சாராய ஊறல்களையும் சேர்த்து அழித்தனர்.