பழனியருகே நரிக்குறவர் இனமக்கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்

 

பழனியருகே வறுமையில் வாடும் நரிக்குறவர் இனமக்கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு  திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 

இதேபோல சின்ன கலையமுத்தூர் பகுதியிலும் நரிக்குறவர்கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழில் செய்வோர் குடும்பங்கள் உட்பட  இருநூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 

ஊரடங்கு காரணமாக தொழில் இழந்து வறுமையில் வாழும் இவர்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் தனது சொந்த நிதியில் இருந்து   நிவாரண பொருட்களை வழங்கினார்.

 

இதன்படி நானூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு இலவச அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

 

பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், மேற்கு மாவட்ட‌ ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் செபஸ்டின், லோகநாதன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர் .