தந்தையின் தலையில் வெட்டி, மகனின் காலை உடைத்த 4 பேர் கைது, 2 பேர் தலைமறைவு

வேப்பூர் அருகில் முன் விரோதத்தால் 6 பேர் சேர்ந்த கும்பல் எதிரியின்   வீட்டிற்கு  சென்று  தந்தையின் தலையில் வெட்டிவிட்டு  மகனின்  காலை உடைத்தனர். 

 

கடலூர் மாவட்டம், வேப்பூர்  அருகிலுள்ள தே, புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் தினேஸ் (வயது 23), என்பவருக்கும், ரங்கசாமி மகன் அப்பு (வயது 21) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது 

 

கடந்த 7 ந் தேதி கணேசன், அவரது மனைவி ஆதிலட்சுமி இருவரும் மாடுகளை மேய்க்க சென்றுவிட்ட நிலையில் ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே தினேஸ் வந்துள்ளார் அப்போது அங்கு  அப்பு தலைமையில்  தமிழ்செல்வன், முனுசாமி, ராஜவேல், நாகேஸ், அஞ்சாமணி உள்ளிட்ட மேலும் சிலர் வந்து தினேஸை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்   அதனால் அவரது வலதி காலில் முறிவு ஏற்பட்டது 

 

இது குறித்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த அவர்களது தந்தை கணேசன் தாய் ஆதிலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்

 

மறுநாள் 8- ந்தேதி காலையில் கணேசன் அவரது மனைவியும், அதே கிராமத்தில்  ரோட்டு தெருவிலுள்ள தநது மகள் பவானி வீட்டிற்கு சென்றுள்ளனர் இதை கண்ட அப்பு, தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் பாவானி வீட்டிற்கு சென்று அங்கிருந்த கணேசனை உன் மகன் கூடவே நீயும் போய் சேருடா என்று கணேசன் தலையில் வெட்டிவிட்டு இரும்பு பைப்புகளால் அனைவரும் பலமாக தாக்கியுள்ளனர் இதனால் கணேசன்  மயக்கமடைந்துள்ளார் பின்னர் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து அங்கிருந்து வேப்பூர்அரசு மருத்துவமனை, பெரம்பலூர் மருத்துவமனை என பரிந்துரைக்கபட்டு, பின்னர்  திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு அங்கு  கோமா நிலையி்ல் சிகிச்சை  பெற்று வருகிறார்  

 

இது குறித்து கணேசன் மனைவி ஆதிலட்சுமி  வேப்பூர்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் கவிதா,  எஸ்ஐ, சக்திகணேஷ்  ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழக்கில் சம்மந்தப்பட்ட முனுசாமி, ராஜவேல், அஞ்சாமணி, நாகேஸ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர், மேலும் தலைமறைவாக உள்ள அப்பு , தமிழ்செல்வன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Previous Post Next Post