திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு ஜிங்க் (வைட்டமின்) மாத்திரைகள், முகக் கவசம், கிருமிநாசினி; எம்.எல்.ஏ சு.குணசேகரன் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 45 வது வார்டில் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் 50,000 மதிப்புள்ள ஜிங்க் (வைட்டமின்) மாத்திரைகள், முகக் கவசம், கிருமிநாசினி ஆகியவைகளை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


அப்போது தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசங்களை தவறாது பயன்படுத்த வேண்டும். கிருமி நாசியையை கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மாத்திரைகள் தினமும் தவறாது சாப்பிடுங்கள். ஏதாவது உதவி தேவை பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் என்று அறிவுரை வழங்கினார். 


இதில் பி.கே.எஸ்.சடையப்பன், கண்ணப்பன், கண்ணபிரான், மாநகராட்சி உதவி ஆணையாளர் சுப்பிரமணியம், சுகாதார அலுவலர் பிச்சை, கோகுல், மருந்தக ஆய்வாளர் ஆர்.ராமசாமி, மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் அசோகன், செயலாளர் சுந்தரம், பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.