இன்று 434 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 10,108 ஆக அந்த எண்ணிக்கை உள்ளது.


இதன்மூலம் இந்திய அளவில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது.


சென்னையில் இன்று 310 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது, இதன்மூலம் அங்கு 5946 ஆக மொத்த பாதிப்பு உள்ளது. 


இன்று மட்டும் 10,883 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 303104 பேருக்கு பரிசோதனை செய்யபப்ட்டு இருக்கிறது. 


இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்ததுடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 71 ஆக உள்ளது.