தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா... இரண்டு நாட்களில் பாதிப்பு 1000 ஐ கடந்தது... கிருஷ்ணகிரி பச்சை மண்டல அந்தஸ்தை இழந்தது...

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக கோயம்பேடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று மட்டும் தமிழகத்தில், 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டு உள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. 


நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்பு 1000 க்கும் அதிகமாக உள்ளது.


சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


அடுத்தபடியாக கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், தலா 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


விழுப்புரத்தில் 25 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.


நாமக்கல்லில் 15 பேருக்கும், திண்டுக்கல்லில் 7 பேருக்கும், தேனியில் 5 பேருக்கும்,  நீலகிரியில் 4 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


தர்மபுரி, சேலம், காஞ்சிபுரம், மதுரை, சேலம், பெரம்பலூர், தென்காசி, நெல்லை, திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.


இன்று மட்டும்11,858 மாதிரிகள் பரிசோதனை செய்யபப்ட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,74,828 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. 


இன்று குணமடைந்து வீட்டுக்கு சென்ற 76 பேர் உள்பட வீட்டுக்கு சென்றவர்கள்  எண்ணிக்கை 1485 பேராக உள்ளது. 


2,537 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


இன்று இருவர் இறந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 


கடந்த 21 நாட்களாக ஒரு கொரோனா தொற்றுக்கூட கண்டறியப்படாததால், ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளது.


2 கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை புதிதாக முளைத்ததை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டல அந்தஸ்தை இழந்தது.