தமிழகத்தில் 526 பேருக்கு கொரோனா... இன்று மட்டும் 4 பேர் பலி

தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 6,535 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 


4360 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.13,254 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த சோதனைகளில் தான் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இன்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


இன்று மட்டும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது/


சென்னையில் மட்டும் இன்று  279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளனர். 


சென்னைக்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


பெரும்பாலான கொரோனா தொற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் தான் ஏற்ப்பட்டு உள்ளது.