தமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 5,409 ஆனது

தமிழ்நாட்டில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதிக அளவில் பரவுவதால் தமிழகம் முழுவதும் கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களை தேடிப்பிடித்து பரிசோதிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


கடந்த மூன்று நாட்களாக கிட்டத்தட்ட 2,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதில் சென்னையில் 316 பெருக்கும், அரியலூரில் 24 பேர், செங்கல்பட்டு 13 பேர், கடலூர் 32 பேர், பெரம்பலூர் 33 பேர், திருவள்ளூரில் 63 பேர், விழுப்புரம் 45 பேர், திருவண்ணாமலை 17 பேர் உள்பட தமிழகத்தில் 580 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


இதன் மூலம் 5,409 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 3822 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,547 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடுகளுக்கு சென்று உள்ளனர்.


இன்று மட்டும் 14,102 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.