மதுக்கடைகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு


எதிர்கட்சி தலைவர் மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்   மு.க.ஸ்டாலின்  வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  ஆணைப்படி ,இக்கட்டான கொரோனா நோய் தொற்று காலத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தோல்வியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.கோபி அவர்களின் தலைமையில்,உடன் மாநில சிறுபான்மையினர் துணை தலைவர் சித்திக் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.நூர்உல்ஹசன் ஆகியோர் கோசம் எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் சார்பில்  எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.