வேப்பூர் பகுதியில் சாரயம் விற்ற மூன்று நபர்கள் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது


 

வேப்பூர் பகுதியில் தொடர்ந்து சாரயம் விற்ற மூன்று  பேரை ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர்

 


 

கடலூர்  மாவட்டம், வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர்  கவிதா மற்றும்  போலீசார்  சாராய வழக்கு சம்பந்தமாக  கண்காணித்து வந்தனர். அப்போது வேப்பூர் அருகிலுள்ள திட்டக்குடி தாலுக்கா  தொண்டாங்குறிச்சியை சேர்ந்த ராஜாராமன் மகன் சந்தோஷ்குமார் (வயது 29) அதே கிராமத்தை சேர்ந்த ராயப்பன் மகன் பாலமுருகன் (வயது 31) ஆகிய இருவரை சிறுபாக்கத்திலும், வேப்பூர் தாலுக்கா ஐவதகுடி சமத்துவபுரத்தை சேர்ந்த அம்மாவாசை மகன் அன்பழகன் (வயது 26) , என்பவரை சேப்பாக்கம் மேம்பாலம் அருகிலும் கைது செய்தார்.

 


 

மேற்கண்ட  மூன்று  சாராய   வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மூன்று  சாராய வியாபாரிகளின்  குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்   பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன் மூவருக்கும்  ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். அதன் பேரில் மூவரும்   ஓராண்டு சாராய தடுப்பு காவலில் வைக்கப் பட்டார்கள். அதற்கான உத்தரவை சிறைதுறை அதுகாரிகள் மூலம் போலிசார் மூவருக்கும் வழங்கினார்கள்