புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க பள்ளி பழைய மாணவர்கள் சார்பாக 60 பேருக்கு  ரூ1000 மதிப்புள்ள பொருட்கள்

பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க பள்ளி பழைய மாணவர்கள் சார்பாக 60 பேருக்கு  ரூ1000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்.

 


 

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி பழைய மாணவர்கள் சார்பாக கொரொனா பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய மக்கள் 60 பேருக்கு ஒரு நபருக்கு ரூ1000 மதிப்புள்ள பொருள்களும்,.ஒரு நபருக்கு கல்வித் தொகைஆயிரம் வழங்கப்பட்டது. 

 

இந்நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள்  தமிழ் ஆசிரியர் சின்னராணி தலைமை வகித்தார். புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் அந்தோணிஜெயராஜ், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின்காமராஜ், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்துமணி, மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, ஊராட்சித் தலைவர்கள் சாஸ்தாவிநல்லூர் திருக்கல்யாணி, பள்ளக்குறிச்சி  சித்ராங்கதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம்  வட்டாட்சியர்  ராஜலட்சுமி,சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன், தட்டார்மடம்  உதவி ஆய்வாளர்  முத்துசாமி ஆகியோர் நிவாரண பொருள்களை வழங்கினர்.