தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 399 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றின் வேகம் உலகத்தையே திருப்பி போட்டுள்ளது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 6,009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


தமிழகத்தில் தற்போதைய நிலையில் 4,361 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


இன்று மட்டும் 13,981 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளது.


சென்னையி மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 75 பேருக்கும், கடலூரில் 34 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.