600 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ. கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்கள்  


திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி பல்லடம் நகராட்சிக்குட்பட்ட மேற்கு பல்லடம் பகுதிகளுக்கு நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் வைஸ் பழனிச்சாமி, அவர்களின் ஏற்பாட்டின் பேரில் மேற்கு பல்லடம் பகுதியில் வசிக்கும் 600 ஏழை எளிய குடும்பங்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன்  ஆகியோர் அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சங்கர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராமமூர்த்தி, தங்கவேல், பானு பழனிச்சாமி, குங்குமம் சிவக்குமார், பாரதி செல்வராஜ், தமிழ்நாடு பழனிச்சாமி, சரலை விக்னேஷ், லட்சுமணன், வெண்ணை சுப்பிரமணியம், யவன கதிரவன், ரவி, கயாஸ், சதீஷ், கந்தசாமி, பருவாய் மாணிக்கம், செல்வி, வனஜா, மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்துகொண்டனர்.