வேப்பூர் பகுதியில்  புதிதாக யாருக்கும்  கொரோனா தொற்று இல்லை; முகாம் அமைந்த பள்ளி மூடபட்டது 


 

வேப்பூர் தாலுக்காவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் 

முகாம் அமைத்த திருப்பெயர்  ஜெயப்பிரியா பள்ளியை  அதன்  நிர்வாகத்திடம் வருவாய்துறையினர் ஒப்படைத்தனர் 

 

கடலூர் மாவட்டம் வேப்பூர்,  நல்லூர் பகுதியை  சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேட்டில் பணி செய்து வந்தனர் அங்குள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட் மூடபட்டது அதனால் மார்கெட்டில் இருந்த அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பினார்கள், நல்லூர், வேப்பூர் பகுதியை சேர்ந்த    சுமார் 200க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள்  கடந்த 2. ந்தேதி வேப்பூர் பகுதியிலுள்ள  தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்

 

 அப்படி வந்த சில தொழிலாளர்களை வேப்பூர் அருகிலுள்ள ஜெயப்பிரியா பள்ளியில் தங்க வைக்கபட்டு சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளபட்டது

 

அதில் சில தொழிலாளர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் அவர்களை  கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கபட்டனர் 

 

மேலும்  சுமார் 112 நபர்கள் வேப்பூர் அருகிலுள்ள திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியில் தங்கவைக்கபட்டு தனிமை படுத்தபட்டனர் அப்படி தனிமைபடுத்தபட்டவர்களை  மீண்டும்  பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாததால் அவர்களை கடந்த 14 ந் தேதி 10 நபர்கள், 15 ந் தேதி 84 நபர்கள்,  16 ந் தேதி  18 நபர்கள் என  தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கபட்டனர்

 

அதுபோல்  கடந்த ஒரு வாரமாக வேப்பூர், நல்லூர் பகுதியில் புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை அதனால் தனிமை படுத்தல்  முகாம் அமைக்கபட்டிருந்த திருப்பெயர் ஜெயப்பிரியா பள்ளியை அதன் நிர்வாகத்திடம், வேப்பூர் வருவாய்துறையினர் ஒப்படைத்தனர்