அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக சத்து மாத்திரைகள் 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக சத்து மாத்திரைகள் செயல் அலுவலர் முனுசாமி வழங்கினார்.

 


 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் கடந்த 40 நாட்களாக அலுவலர்கள்  பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பாதுகாப்பு முகக் கவசங்கள் கவச உடை மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. 

 

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்திக்காக வாரந்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இலவச நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் அவர்களின் உத்தரவின் பேரில் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்காக இரும்பு சத்து மாத்திரைகள் மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி வழங்கினார்.