வேப்பூரில் ஊரடங்கு தளர்வு; கட்டுப்பாடுகளுடன் கடை திறக்க வியாபாரிகளுக்கு தாசில்தார் உத்தரவு

தமிழகம் முழுவதும் சில கட்டுபாடுகளுடன்  ஊரடங்கை தளர்வு செய்வதாக தமிழக  முதல்வர் அறிவித்தார். அதை தொடர்ந்து கடலூர் மாவட்டம்,  வேப்பூரில் கடைகள் மற்றும் உணவகங்கள் நேற்று காலை திறக்கப்பட்டது. 

 

இந்நிலையில் வேப்பூர் தாசில்தார் கமலா, சில கட்டுபாடுகளுடன்  ஊரடங்கு தளர்வு செய்து செய்தார். வேப்பூர் பகுதிக்கு வருகைதந்துள்ள கோயம்பேடு தொழிலாளர்களை  கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில், வைரஸ் உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, வியாபாரிகள் மற்றும்  வாடிக்கையாளர்கள்  முக கவசம், கிருமி நாசினியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு தாசில்தார் கமலா அறிவுறுத்தினார்.