குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா; பக்தர்களுக்காக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு






 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா நாடெங்கும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் விதிகள் படி மக்கள் யாரும் இல்லாமல் திருவிழா நடைபெற உள்ளது.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் முக்கிய  திருவிழாக்களில்  வைகாசி  மாதா முதல்  நாளில் நடைபெறும்  குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவும் ஒன்று. அம்மன் திருக்கல்யாணம் தேரோட்டம் ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகள்.

 

இந்தத் திருவிழாவின்போது வேலூர் மாவட்டத்தில் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கொரானா வைரஸ் நோய்த்தொற்று காரணத்தால் பொது முடக்கம் அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

குடியாத்தம் பகுதியில் மக்கள் கெங்கையம்மன் கிராம தேவதை காக்கும் கடவுளாகவும் நம்புகின்றனர். அம்மன் திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்றால் திருமணம் கைகூடும், குழந்தைபேறு இல்லாதவர்கள் திருவிழா நாளில் அம்மன் மடிமீது குழந்தையை அமர வைப்பதாக வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

பொது முடக்கம் காரணமாக காப்புக்கட்டுதல் கொடி ஏற்றுதல் அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு சிலர் பங்கேற்புடன் எளிய முறையில் நடைபெற்றுள்ளன.

 

கோயிலுக்குள் வந்து கூழ் வார்ப்பதைத் தவிர்த்து பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே கூழ் வார்த்து வருகின்றனர். இந்தநிலையில் வரும் வியாழக்கிழமை வைகாசி மாதம் முதல் நாள் அம்மன் சிரசு திருவிழா 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அகமா விதிகள் படி மக்கள் யாரும் இல்லாமல் திருவிழா நடைபெறும்.

 

பொது மக்கள் வலைத்தளங்களில் நேரடியாக கண்டுகளிக்கும்மரு ஆலய நிர்வாகம் சார்பாக மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

 

 




 

 


 



 



Previous Post Next Post