சென்னை விபத்தில் பலியான பாவூர்சத்திரம் பெண் காவலர்  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது

சென்னையில் விபத்தில் பலியான பாவூர்சத்திரம் பெண் காவலர்  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலஅரியப்பப்புரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தற்போது குடும்பத்துடன் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் வசித்து வருகிறார். சரவணனின் மூத்த மகள் பவித்ரா வயது 22. இவர் சென்னை ஆயுதப்படை பிரிவு காவலராக  பணியாற்றி வந்தார்.


இவர் கடந்த 5-ந்தேதி சென் னையில் நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பவித்ரா உடல் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து  சொந்த ஊரான மேலஅரியப்பப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


அங்கு தென்காசி  உதவி ஆய்வாளர் சவுந்தரராஜன்,  பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர்  (பொறுப்பு) தமிழரசன் ஆகியோர், பவித்ரா உட லுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள்  முழங்க அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.