பட்டாசு வெடித்து... பூத்தூவி... டாஸ்மாக் கடை திறப்பை கொண்டாடித்தீர்த்த குடிமகன்கள்.. குடி குடியை கெடுத்தே தீரும்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போது, சமூகவலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும் எழுந்த எதிர்ப்பை பார்த்த போது அடடா.. இனிமேல் தமிழகத்தில் குடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும் என்றே  பலரும் நினைத்தனர்.


ஆனால் திருப்பூரில் மதுவாங்க குவிந்த கூட்டத்தையும், குடிமகன்கள் கொண்டாடிய விதத்தையும் பார்க்கும்போது, வெளியில் குடியை ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு, முதல் ஆளாய் மது வாங்க வந்து விடுகிறார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.


வீடியோ இதோ:




ஆம்,  கொரோனா பரவல் காலம் என்பதால், திருப்பூரில் மதுவாங்க வருபவர்கள் குடைப்பிடித்து வந்தால் தான் மது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. குடிமகன்கள் வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்ற கோடுகள் அமைக்கப்பட்டும், தடுப்புகள் அமைக்கப்பட்டு ம் இருந்தன.


இந்நிலையில், காலையிலேயே திருப்பூரில் மதுக்கடைகளுக்கு குடிமகன்கள் குடையுடன் வந்து சமூக இடைவெளியை பின்பற்றி நின்று மதுவாங்கி சென்றுள்ளனர்.



திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் எம்.எஸ்.நகரில் உள்ள மதுக்கடையில், மதுக்கடை திறக்கப்பட்டதை குடிமகன்கள் படடாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். 



இதுதவிர திருப்பூர் கோவில்வழி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைக்கும், மதுவாங்க வந்தவர்களுக்கும் பூத்தூவியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி தீர்த்து உள்ளனர். 



’லட்சக்கணக்கில் பணம் எல்லாம் வேண்டாம், ஆல்கஹால்,மட்டும் கொடுத்து விடுங்க போதும்” என்று பூத்தூவி கொண்டாடிய குடிமகன்கள் சிலிர்த்தனர். 


இன்னும் பலபேர் சத்தமில்லாமல் வாங்கி சென்றாலும், தனியே போய் தங்கள் நண்பர்களுடன் கொண்டாடி இருப்பார்கள் என்பது நிச்சயம். 


மொத்தத்தில் ‘குடி குடியை கெடுத்துக் கொண்டிருக்கிறது”  


 


 


Previous Post Next Post