மாஸ்க் போட்டு நடிப்பாங்களா... சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.


இந்நிலையில் கடந்தவாரத்தில் பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கு அரசு அனுமதி கொடுத்து இருந்தது. 


இந்நிலையில் இன்று தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. 


இந்த உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். 


சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்த வேண்டும்.


படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர் நடிகையர் தவிர அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் முக கவசம் அணிய வேண்டும். 


பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.


படப்பிடிப்பில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.


தடை செய்யப்பட்ட இடங்களிலும், பொது இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை.


என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 


 கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக ‘பாண்டியன் ஸ்டோர், அதே கண்கள், அரண்மனைக் கிளி, பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் தாய்மார்களை கட்டிப்போட்டு வைத்திருந்தன.


ஊரடங்கிற்கு பிறகு தமிழ்நாட்டுப் பெண்கள் சீரியல்களை மறந்து, செய்தி சேனல்கள் பக்கம் திரும்பி இருந்தனர். 


தற்போது மீண்டும் சீரியல் படப்பிடிப்புகள் நடக்குமானால் செய்தி சேனல்களில் இருந்து வீடுகள் தோறும் சீரியல் பார்க்க பெண்கள் மாறுவார்கள் என்பது உறுதி.


Previous Post Next Post