இடைச்செருவாய் ஊராட்சியில்அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம்

இடைச்செருவாய் ஊராட்சியில்அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்குதல்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி  அடுத்த இடைச்செருவாய் ஊராட்சியில்  அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மங்களூர் ஒன்றிய அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளில் நிவாரணம் வழங்கி வருகின்றது. அதனடிப்படையில்  திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் ஊராட்சியில் நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

நிகழ்விற்கு ஒன்றிய துணைத்தலைவர் அம்பேத்கர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் இலட்சாதிபதி வரவேற்று பேசினார். ஆசிரியர் பயிற்றுனர் பிரபா ,கல்வி விழிப்புணர்வு பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய பொருளாளர் சித்தார்த்தன், ஆசிரியர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் வீரமணி, முனைவர் வழியரசன் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டு

ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற பெண்களின் குடும்பத்தினருக்கு அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்பினையும் கபசுர குடிநீரும் வழங்கினார்கள்.

 

இந்நிகச்சியில் மாவட்ட துணைஅமைப்பாளர் ஆறுமுகம், ஆசிரியர் ராஐபாலன் மற்றும் 

தன்னார்வலர்கள் சுனில்குமார் ,சக்திவேல் அஜித் ,அமரன், உட்பட பலர்  கலந்து கொண்டனர்.