ஆவட்டி ஊராட்சியில் அனைத்துக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்ஆவட்டி ஊராட்சியில் அனைத்துக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ஊராட்சியில் அனைத்து கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா ஆதிமூலம் தலைமை தாங்கினார்.

 

ஒன்றிய கவுன்சிலர் சிவமாலை சாமிதுரை, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் ஆவட்டி விஜி, துணை தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.

 

அரசு ஊழியர் ஐக்கிய பேரவை வட்ட செயலாளர் மகேந்திரன்,  ஆலோசகர் மணிகண்டன்,  தலைவர் வெள்ளி வேல் வரவேற்றனர்.

 

சிறப்பு அழைப்பாளராக மங்களூர் ஒன்றிய  திமுக இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலருமான  கே என் டி சுகுணா சங்கர், ஒன்றிய துணை செயலாளர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான மாரிமுத்து கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள். வழங்கினர்.

 

அதைத் தொடர்ந்து மக்கள் பாதை இயக்கத்தின் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

 

இதில் ஊராட்சி செயலர் கருப்பையா, அதிமுக கிளைச் செயலாளர் நாகராஜ், வார்டு உறுப்பினர்கள் ராமசாமி, கொளஞ்சி ,மக்கள் பாதை இயக்கம் நிர்வாகிகள் ரமேஷ், திருமேனி ,செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்